இன்று கிரண் பேடி பிறந்த நாள்: வாழ்த்து தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு

புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் 70-ஆவது பிறந்த நாள் விழா ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) கொண்டாடப்பட உள்ளது. நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்று ஆளுநருக்கு


புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் 70-ஆவது பிறந்த நாள் விழா ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) கொண்டாடப்பட உள்ளது. நிகழ்வில் பொதுமக்கள் பங்கேற்று ஆளுநருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஆளுநர் மாளிகை செயலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் 70-ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக காலை 9 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும், காலை 11 முதல் பகல் ஒரு மணி வரை பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் ஆளுநர் கிரண் பேடியைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சல் மூலம் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: எனது (ஆளுநர்) 70-ஆவது பிறந்த நாளை புதுவைக்கு அர்ப்பணித்துள்ளேன். எதிர்காலத்தை பசுமை புதுவையாக மாற்ற நானும், ஆளுநர் மாளிகை குழுவினரும் தொடர்ந்து பயணிக்க உள்ளோம். புதுவையை பசுமை மாநிலமாக்க நீர்நிலை மிகுந்த இடங்களான குளங்கள், குட்டைகள், ஏரிகள் உள்ளிட்ட இடங்களில் மரங்களை நட வேண்டும்.
மேலும் காடுகள், பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள்,  வழிபாட்டுத் தலங்கள் என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும். வார இறுதி நாள்களில் ஆளுநர் மாளிகை குழுவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடங்கள் வார ஆய்வுக்கு முன்பே தெரிவிக்கப்படும்.
 இந்தப் பணியில் மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள்,  தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். 2016-இல் வளமான புதுவையையும்,  2017-இல் தூய்மையான புதுவையையும், 2018-இல் நீராதாரம் மிகுந்த புதுவையையும் அடையும் வகையில் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டோம்.
தற்பொழுது 2019-இல் பசுமையான புதுவை எனும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கடவுள் அளித்த இந்த வாழ்வை இதைவிட வேறு நல் வழிகளில் செயல்பட முடியாது என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com