பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் ஜூன் 23-இல் கும்பாபிஷேகம்

புதுச்சேரி அருகே பஞ்சவடீயில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஜூன் 23-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

புதுச்சேரி அருகே பஞ்சவடீயில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஜூன் 23-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இங்கு, கடந்த 2007-ஆம் ஆண்டு 36 அடி உயரமுள்ள விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தற்போது ஸ்ரீ ஆஞ்சநேயர்,  ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ராமர்,  (அண்மையில் புதிதாக நிர்மாணம் செய்யப்பட்ட ஏழரை அடி) வெங்கடாசலபதி சன்னதிகளின் விமானங்கள் மற்றும் 
5 நிலை ராஜ கோபுரம் ஆகியவற்றுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
முன்னதாக, ஜூன் 17-ஆம் தேதி காலை 9 முதல் ஹோமம் மற்றும் பூஜைகள் தொடங்குகிறது. தொடர்ந்து, ஜூன் 17 முதல் 
23-ஆம் தேதி வரை காலை, மாலை வேளைகளில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
 ஜூன் 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு  ராஜாக்கள் காலத்தில் நடைபெறுவது போன்ற "தச தரிசன பூஜை',  ராஜ கோபுரத்தின் வழியாக பிரவேசம் செய்யப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜூன் 
23-ஆம் தேதி நடைபெறும் மஹா கும்பாபிஷேகத்துக்காக கோதாவரி, நர்மதை, கிருஷ்ணா, காவிரி, தாமிரபரணி, பாலாறு, துங்கபத்ரா உள்ளிட்ட புண்ணிய நதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைஷ்ணவ, சைவ புஷ்கரணிகளிலிருந்தும் புனித நீர் கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 விழாவில், ஸ்ரீமத் அஹோபிலமட ஜீயர் சுவாமிகள்,  ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், மைசூரு பரகால மட ஜீயர் சுவாமிகள், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ஸ்ரீ வித்யாபீடாதீஸ்வர  
ஸ்ரீ கிருஷ்ண நந்ததீர்த்த மஹா சுவாமிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஜூன் 23-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி - ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச திருக்கல்யாண வைபவமும் நடைபெற இருக்கிறது. தொடர்ந்து, ஜூன் 24 முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. 
பிரபல தொழில் அதிபரும், டி.வி.எஸ். குழும நிறுவனங்களின் தலைவருமான  வேணு சீனிவாசன் தலைமையில், விழாக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜூன் 23-ஆம் தேதி  திண்டிவனம், புதுச்சேரியில் இருந்து இலவசப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com