கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று தொடக்கம்
By புதுச்சேரி, | Published On : 06th March 2019 08:34 AM | Last Updated : 06th March 2019 08:34 AM | அ+அ அ- |

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதனுடன் மார்ச் 6-ஆம் தேதி தொடங்குகிறது.
ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்னதாக 40 நாள்கள் கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் தொடங்கும் புதன்கிழமை அன்று குருத்தோலை சாம்பல் நெற்றியில் பூசப்படுவதால் அந்நாளை சாம்பல் புதன் என்றழைக்கின்றனர்.
மார்ச் 6-ஆம் தேதி தொடங்கும் சாம்பல் புதன் அன்று ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ணும் நோன்பு கடைப்பிடிக்கப்படும். தொடர்ந்து, வரும் தவக்காலத்தில் வரும் 6 வெள்ளிக்கிழமைகளில் கிறிஸ்த ஆலயங்கள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதற்காக புதுச்சேரியில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் நெற்றியில் குருத்தோலை சாம்பல் பூசும் நிகழ்வு புதன்கிழமை திருப்பலியுடன் நடைபெறுகிறது. இதில் அருட்தந்தைகள், ஒவ்வொருவரின் நெற்றியிலும் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை தொடங்கி வைப்பர். சிஎஸ்ஐ உள்ளிட்ட மற்ற சபைகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும்.
வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி ஏசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 21-ஆம் தேதி ஏசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாட உள்ளனர்.