இளம்பெண் பாலியல் பலாத்காரம்: எலக்ட்ரீஷியன் கைது
By DIN | Published On : 28th March 2019 09:00 AM | Last Updated : 28th March 2019 09:00 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக எலக்ட்ரீஷியன் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி வ.உசி. வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (32). எலக்ட்ரீஷியன். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர், ஒதியஞ்சாலை பகுதியில் உள்ள தனது மனைவியின் உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
அப்போது அங்கு ஒரு இளம்பெண்ணிடம் நெருங்கி பழகி வந்த ரமேஷ், அப்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட இளம்பெண் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீஸார் வழக்குப் பதிந்து, ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...