தமிழக துணை முதல்வருக்கு அதிமுகவினர் வரவேற்பு
By DIN | Published On : 28th March 2019 09:35 AM | Last Updated : 28th March 2019 09:35 AM | அ+அ அ- |

அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரிக்கு பிரசாரம் மேற்கொள்ள வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்து வரவேற்றனர்.
புதுச்சேரிக்கு பிரசாரம் மேற்கொள்ள வந்த ஓ. பன்னீர்செல்வத்தை, மாநில எல்லையான மதகடிப்பட்டில் அதிமுக மாநிலச் செயலர் புருஷோத்தமன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஓம்சக்தி சேகர், பெரியசாமி ஆகியோர் ஓரணியாகவும், எம்எல்ஏக்கள் ஆ.அன்பழகன், வையாபுரிமணிகண்டன், கோகுலகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் மற்றொரு அணியாகவும் வரவேற்றனர்.
அதேநேரத்தில், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, வேட்பாளர் கே.நாராயணசாமி, கோபிகா எம்எல்ஏ ஆகியோரும் வரவேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...