புதுவை தொகுதியில் 18 பேர் போட்டி
By DIN | Published On : 30th March 2019 09:03 AM | Last Updated : 30th March 2019 09:03 AM | அ+அ அ- |

புதுவை மக்களவைத் தொகுதியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் இறுதிப் பட்டியலின்படி 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
புதுவை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி நிறைவடைந்தது. 37 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், 18 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மனுக்களை திரும்பப் பெற வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப் பட்டியல், வேட்பாளர்களுக்கான சின்னங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் தி.அருண் வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டார்.
வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் குறித்த விவரம்:
1. கே.நாராயணசாமி (என்.ஆர்.காங்கிரஸ்) - ஜக்கு
2. வெ.வைத்திலிங்கம் (காங்கிரஸ்) -கை
3. ஏ.பாத்திமாராஜ் (பகுஜன் சமாஜ்) - யானை
4.கே.அருணாசலம் (அகில இந்திய மக்கள் கழகம்)
5. எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன் (மநீம) டார்ச் லைட்
6. சு.திருஞானம் (ஊழல் ஒழிப்பு செயலாக்கக் கட்சி)
7. எஸ்.பாஸ்கரன் (புதுச்சேரி வளர்ச்சிக் கட்சி)
8. யு.முத்து (இந்திய சோசியலிஸ்ட் ஒற்றுமை மையம்)
9. எஸ்.மோதிலால் (மார்க். லெனினிஸ்ட் கட்சி)
10. நி.ஷர்மிளா பேகம் (நாம் தமிழர் கட்சி)
11. நா.தமிழ்மாறன் (அமமுக) - பரிசுப் பெட்டி
சுயேச்சைகள்: கா.ராமதாஸ், எம்.கிருஷ்ணமூர்த்தி, சு.தங்கவேலு, திராவிட மங்கை (எ) லூர்துமேரி,
எஸ்.பாலாஜி, டி.ரமேஷ், வி.ராமமூர்த்தி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...