சிறைக் காவலர் பணிகளுக்கு 24-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 05th May 2019 01:34 AM | Last Updated : 05th May 2019 01:48 AM | அ+அ அ- |

சிறைக் காவலர் பணிகளுக்கு மே 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சிறைத் துறை ஐ.ஜி. அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை சிறைத் துறையில் காலியாக உள்ள 21 ஆண் சிறைக் காவலர் பணியிடங்களுக்கும், 5 பெண் சிறைக் காவலர் பணியிடங்களுக்கும் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு மூலம் ஆள்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு பிளஸ் 2, அதற்கு நிகரான கல்வித் தகுதியைப் பெற்று, 20 முதல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு இணையத்தளத்தில் மே 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பலமுறை விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும். புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதளத்தில் நிறைவு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்திருக்க வேண்டும். தேர்வு முடிவுகளும் இணையத்திலேயே வெளியிடப்படும்.
இதுகுறித்து கூடுதல் விவரம் அறிய 0413 - 2655660 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.