குபேர் கல்வெட்டில் திருத்தம் செய்யக் கோரிக்கை
By DIN | Published On : 15th May 2019 09:00 AM | Last Updated : 15th May 2019 09:00 AM | அ+அ அ- |

புதுவையின் முதலாவது முதல்வர் குபேர் கல்வெட்டில் தவறாக உள்ள பெயரை திருத்தம் செய்ய வேண்டும் என்று புதுச்சேரி தன்னுரிமைக் கழகம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுவை அரசின் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கணேசனிடம் அந்த அமைப்பின் தலைவர் சடகோபன் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
புதுச்சேரியில் மேயராகவும், புதுவையில் முதலாவது முதல்வராகவும் பதவி வகித்தவர் குபேர். இவரது நினைவாக, புதுச்சேரி குபேர் சாலையில் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.
அதன் இறுதி வரியில் "டஹல்ஹ எர்ன்க்ஷங்ழ்ற்" என்பதன் தமிழாக்கம் பாப்பா குபேர் என்று இடம் பெற்றிருக்கிறது. குபேரை மக்கள் பப்பா என்று தான் அழைத்தனர்.
பாப்பா என்றால் பொருளே மாறுகிறது. பப்பா என்பதே சரியான சொல்லாகும். எனவே, பாப்பா குபேர் என்பதை பப்பா குபேர் என்று திருத்தம் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.