மாநில கபடிப் போட்டியில் பங்கேற்க 22-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 15th May 2019 09:00 AM | Last Updated : 15th May 2019 09:00 AM | அ+அ அ- |

புதுவை மாநில அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மாநில கபடி சங்கத் தலைவர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை: புதுவை மாநில கபடி சங்கம் சார்பில், மாநில அளவிலான 46-ஆவது சாம்பியன்ஷிப் கபடி போட்டி வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் கபடி அணிகளுக்கான பதிவு விண்ணப்பங்கள் கடந்த 10-ஆம் தேதி முதல் திருபுவனைபாளையம் சாலையில் சினிமா திரையரங்கு வணிக வளாகத்தில் உள்ள கபடி சங்க அலுவலத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் 19-ஆம் தேதி இரவு 8:30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கபடிப் போட்டிக்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் சிவக்குமார், பொதுச் செயலர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.