புதுச்சேரியில் அருங்காட்சியக தினம் கடைப்பிடிப்பு
By DIN | Published On : 19th May 2019 09:58 AM | Last Updated : 19th May 2019 09:58 AM | அ+அ அ- |

புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் சர்வதேச அருங்காட்சியக தினம், புதுச்சேரியில் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. துளிர் இல்லங்கள், ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்றம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி அரியாங்குப்பம் ஹர்கோபிந்த் குரானா அறிவியல் மன்றத்தில் நடைபெற்றது.
சர்வதேச அருங்காட்சியக சபை 2019ஆம் ஆண்டின் கருப்பொருளாக "கலாச்சார மையங்கள்: பாரம்பரியத்தின்எதிர்காலம்' (இன்ப்ற்ன்ழ்ஹப்ஏன்க்ஷள்: பட்ங் ஊன்ற்ன்ழ்ங் ர்ச் பழ்ஹக்ண்ற்ண்ர்ய்).என்று அறிவித்துள்ளது. அரிக்கன்மேடு ஆராய்ச்சி நிறுவனத்தின் அரவிந்த் அருங்காட்சியகங்களின்பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
துளிர் இல்ல மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் 2019ஆம் ஆண்டின் கருப்பொருளை விளக்கி மாணவர்கள் பின்பற்றவேண்டிய உயர்ந்த நமது கலாசாரமும் அதன் முக்கியத்துவமும் பற்றி சிறப்புரையாற்றினார். மேலும், புதுவையின் வரலாற்றுத் தொன்மை, சிறப்புகள் பற்றிய காணொலி குறும்படங்கள் மூலம் விளக்கம் அளித்தார்.
மேலும், அவர் பேசும்போது, நமது பண்பாடு, கலை,அறிவியல், சமூகம், வாழ்வியல் போன்றவைகளில் கிடைக்கப்பெற்ற தரவுகள், சாட்சியங்கள், பொருள்கள், ஆதாரங்களைக் கொண்டு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உணர்ச்சிப்பெருக்கால் நாம் நம்மை என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளலாம். உண்மையில் ஆதாரங்களே அறிவியலுக்குதேவை. நமது ஆதாரங்கள் அருங்காட்சியகத்தில் மட்டுமே உள்ளன. குழந்தைகளோடு அருங்காட்சியகம் செல்ல வேண்டும். அங்குள்ள பொருள்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். எப்படி வாழ்ந்தோம் என்று ஆதாரங்களுடன், பின்னூட்ட கதைகளுடன் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவைகளிலிருந்து, அவைகளின் அறிவையும் அனுபவங்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
இது தொடர்பான விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு அளித்தனர். அரிக்கன்மேடு, அருங்காட்சியகம், பாரதிபூங்கா, தாவரவியல் பூங்கா மற்றும் பல்வேறு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொன்மையான இடங்களை மாணவர்கள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில், துளிர் இல்ல மாணவர்கள், அறிவியல் மன்ற உறுப்பினர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அறிவியல் மன்ற உறுப்பினர்கள்விக்னேஷ், வெங்கடேசன், வல்லரசு, செல்வராஜ் மற்றும் யோகானந்தன் ஏற்பாடுகளை செய்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.