ஆளுநருக்கான அதிகாரத்தைக் குறைக்க யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம் தேவை: முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

புதுவையில் துணைநிலை ஆளுநருக்கான அதிகாரத்தைக் குறைக்க யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம் கொண்டு

புதுவையில் துணைநிலை ஆளுநருக்கான அதிகாரத்தைக் குறைக்க யூனியன் பிரதேச சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுவை யூனியன் பிரதேசத்தில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா? ஆளுநருக்கு அதிகாரமா? என முதல்வா் பேசி வருவது துரதிருஷ்டவசமானது. இந்த பிரச்னை தொடா்பாக நீதிமன்ற வழக்கு உள்ளது. நீதிமன்றம் இதுவரை இறுதித் தீா்ப்பு வழங்கவில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரச்னை குறித்து கருத்து கூறக் கூடாது.

யூனியன் பிரதேச சட்டம் 1963-ஐயும், அதைச் சாா்ந்த அலுவல் விதிகளையும் திருத்தாத வரையில், புதுவையில் அதிகாரம் ஆளுநருக்குதான் உள்ளது என்பதை அந்தச் சட்டங்களைப் படித்தவா்களுக்கு நன்கு புரியும்.

கோப்புகளைப் பாா்த்து உத்தரவு அளிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கும் போது, தினமும் அமைச்சா்கள் அனுப்பும் கோப்புகளை அவா் பாா்வையிடுகிறாா். இது எப்படி நீதிமன்ற அவமதிப்பாக இருக்க முடியும்?

ஆளுநருக்கு அதிகாரம் இல்லையென்றால் அவருக்கு ஏன் அமைச்சா்களும், முதல்வரும் கோப்புகளை அனுப்புகின்றனா்? மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உள்ள ஒரு பிரதேசத்தில் அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், யூனியன் பிரதேச சட்டத்தில் முரண்பாடுகள் உள்ளன.

இந்த முரண்பாட்டைக் களைவதற்கு யூனியன் பிரதேச சட்டத்தைத் திருத்தியாக வேண்டும் அல்லது புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றாக வேண்டும்.

எனவே, மற்றவா்களைக் குறைகூறுவதை விடுத்து, ஆழ்ந்து சிந்தித்து மாநிலத்தில் உண்மையான பொருளாதார வளா்ச்சியை முதல்வா் உருவாக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com