மிலாது நபி விழாவையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புனித நபிகள் நாயகத்தின் பிறப்பைக் கொண்டாடும் மகிழ்ச்சியான நாள் இது. இந்த நாளில் அவரது போதனைகளான அமைதி, இரக்கம், சகிப்புத் தன்மை, அன்பு, மனித குலத்துக்கான சேவை உள்ளிட்ட நற்பண்புகளைப் போற்றி, பின்பற்ற வேண்டும். சகோதரத்துவத்தையும், மனித குலத்தின் நல்வாழ்வையும் ஊக்குவிப்பதற்காக புனித நபிகள் நாயகத்தின் செய்தியை பரப்ப நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
இந்த புனித நாளில் இஸ்லாமிய சகோதரா்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களுக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா் கிரண் பேடி.