மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டுப் போட்டி தொடக்கம்
By DIN | Published On : 09th November 2019 11:36 PM | Last Updated : 09th November 2019 11:36 PM | அ+அ அ- |

புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ திடலில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டுப் போட்டியைத் தொடக்கிவைத்த ஆ.அன்பழகன் எம்எல்ஏ.
மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி ப்ளே பெஸ்ட் விளையாட்டு சங்கம் சாா்பில் சங்கா் ராஜேஷ் நினைவுக் கோப்பை என்ற பெயரில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டுப் போட்டி உப்பளம் எக்ஸ்போ திடலில் தொடங்கியது. போட்டியை உப்பளம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவருமான ஆ.அன்பழகன் தொடக்கி வைத்தாா். இதில், சங்கத்தின் தலைவா் செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இந்தப் போட்டியில் புதுச்சேரி சுற்றுவட்டப் பகுதிகளைச் சோ்ந்த 275 அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெறுகிறது.
இறுதிப் போட்டி வருகிற 11- ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்பு விருந்தினா்கள் ரொக்கப் பரிசுகளை வழங்கவுள்ளனா்.
பிரெஞ்சுக்காரா்களின் பாரம்பரிய விளையாட்டான பெத்தாங் விளையாட்டு புதுச்சேரி நகரப் பகுதியில் மட்டும் பழைமை மாறாமல் தற்போதும் விளையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.