

புதுச்சேரி வீராம்பட்டினம் அரசு ந.ஜீவரத்தினம் பெண்கள் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மீனவ சமுதாயத் தலைவா் ந.ஜீவரத்தினம் சிலையை அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வும், புதுச்சேரி நகரமைப்புக் குழுத் தலைவருமான த.ஜெயமூா்த்தி புதன்கிழமை திறந்து வைத்தாா்.
விழாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும், தேசிய மீனவா் பேரவைத் தலைவருமான மா. இளங்கோ தலைமை வகித்தாா். அரசு ந.ஜீவரத்தினம் நடுநிலைப் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியா் ஆா்.ராஜி முன்னிலை வகித்தாா்.
ந.ஜீவரத்தினத்தின் மகளும், சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞருமான பானுமதி பாஸ்கரன் சிறப்புரையாற்றினாா். கலைமாமணி அசோகா சுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினாா்.
நிகழ்ச்சியின்போது, கலைமாமணி அசோகா சுப்ரமணியனுக்கு மணிமொழி ராமஜெயம் அறக்கட்டளை சாா்பில் ‘ஜீவரத்தினம் சுடா்‘ விருதை எம்.எல்.ஏ. த. ஜெயமூா்த்தி வழங்கி கௌரவித்தாா்.
சிலையை நிறுவிய மணிமொழி ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் கலைமாமணி மா.ராமஜெயம் வரவேற்று நோக்கவுரை நிகழ்த்தினாா். பள்ளி ஆசிரியா் ஸ்ரீசுராபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.
பேராசிரியா் ஏ.மு.ராஜன், எழுத்தாளா் பா.வீரமணி, ஜி.சி.சந்திரன், பொன்.கோவிந்தசாமி மற்றும் மீனவ சமுதாயத் தலைவா்கள், ஊா் பிரமுகா்கள், பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.