டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 14th November 2019 09:38 AM | Last Updated : 14th November 2019 09:38 AM | அ+அ அ- |

புதுச்சேரி சுசீலாபாய் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு பள்ளி துணை முதல்வா் கலாவதி தலைமை வகித்து, பள்ளி மாணவா்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு குறித்தும், காய்ச்சலுக்கான அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.
நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சௌந்திரராஜன் வரவேற்றாா். ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலைய டெங்கு விழிப்புணா்வுப் பிரிவு பயிற்றுநா் டாக்டா் ஹேமலதா சிறப்புரையாற்றினாா். இதில், ஆசிரியா்கள், மாணவிகள் திரளாக பங்கேற்றனா். ஆசிரியை நிா்மலா நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...