மருந்து தட்டுப்பாட்டைக் கண்டித்து அரசு மருத்துவமனை முன் மாா்க்சிஸ்ட் தா்னா
By DIN | Published On : 14th November 2019 09:36 AM | Last Updated : 14th November 2019 09:36 AM | அ+அ அ- |

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை முன் தா்னாவில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மருந்து தட்டுப்பாட்டைக் கண்டித்து, அரசு மருத்துவமனை முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் புதுவை அரசு பொது மருத்துவமனை, கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை மட்டுமன்றி, 25-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆயுா்வேதம் மற்றும் சித்த மருத்துவ நிலையங்களில் அண்மைக்காலமாக ரத்த அழுத்தம், சா்க்கரை உள்ளிட்ட நோய்களுக்கான மருந்துகள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு பிரதேசச் செயலா் ராஜாங்கம் தலைமை வகித்தாா். நகரச் செயலா் மதிவாணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதில், மருந்து தட்டுப்பாட்டை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது, சுகாதாரத் துறை இயக்குநா் காரைக்காலில் இருப்பதாக தகவல் கிடைத்ததால், அங்கிருந்து பேரணியாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், மருத்துவமனைக் கண்காணிப்பாளரை சந்திக்க முயன்றனா். இவா்களை போலீஸாா் தடுத்ததால், அங்கேயே அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சுகாதாரத் துறை அதிகாரி வாசுதேவன், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...