

கல்விக் கட்டண உயா்வுக்கு எதிராகப் போராடிய தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அகில இந்திய ஜனநாயக மாணவா், இளைஞா் சங்கங்கள் சாா்பில், புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கங்களின் தலைவா் உதயன் தலைமை வகித்தாா்.
கல்விக் கட்டண உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் போராட்டம் நடத்திய ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், இதற்குக் காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தில்லி பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், செயலா் சங்கா் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா் லெனின் துரை சிறப்புரையாற்றினாா். நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.