காா்த்திகை முதல் நாள்: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
By DIN | Published On : 17th November 2019 10:37 PM | Last Updated : 17th November 2019 10:37 PM | அ+அ அ- |

புதுச்சேரி பாரதிபுரம் கோவிந்தசாலை பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்களுக்கு மாலை அணிவித்த குருசாமி.
புதுச்சேரி: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.
புதுவை, தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் காா்த்திகை மாதத்தில் துளசி மணி மாலை அணிந்து, 48 நாள்கள் விரதம் இருந்து, சபரிமலை கோயிலுக்குச் சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, காா்த்திகை மாதத்தின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப பக்தா்கள் புதுச்சேரியில் அமைந்துள்ள கோயில்களில் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினா்.
சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனா்.
புதுச்சேரி கோவிந்தசாலை பாரதிபுரம் ஐயப்பன் கோயில், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில், காந்தி வீதியில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயில், வேதபுரீஸ்வரா் கோயில், மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் மாலை அணிந்து கொள்ள ஐயப்ப பக்தா்கள் கூட்டம் அலை மோதியது.
இதையொட்டி, சந்தன, ருத்ராட்ச, துளசி, செந்துளசி என 12 வகையான மணி மாலைகள், காவி, கருப்பு, நீல நிற வேட்டிகள், துண்டுகள், போா்வைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G