இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம்
By DIN | Published On : 11th September 2019 09:34 AM | Last Updated : 11th September 2019 09:34 AM | அ+அ அ- |

இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் புதுச்சேரி பாக்கமுடையான்பட்டில் அண்மையில் நடைபெற்றது.
முகாமை வங்கியின் சென்னை தலைமை அலுவலக பொது மேலாளர் டி.தேவராஜ் தொடக்கிவைத்தார். இந்தியன் வங்கி வழங்கி வரும் கடன், சேவைகள் குறித்து மண்டல மேலாளர் பி.வீரராகவன் வாடிக்கையாளர்களுக்கு விளக்கினார். இதில், முன்னாள் பொது மேலாளர் ஜெயபால், முதன்மை மேலாளர் (கடன்) மீனாட்சிசுந்தரம், வங்கி அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த முகாமில், அடமானம், கார், வீடு, தனிநபர், தொழில் என
பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டன. கடனுக்கு பரிசீலனைக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. மற்ற வங்கியில் இருக்கும் கடன் தொகையை மாற்றியும் கொடுத்தனர். விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்பட்டு, கடன்கள் வழங்கப்பட்டன. இதேபோல, புதுச்சேரி மண்டலத்துக்கு உள்பட்ட விழுப்புரம், திண்டிவனம், காரைக்கால், செஞ்சி பகுதிகளிலும் இந்தியன் வங்கி சார்பில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், ரூ.52 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டன.