மொஹரம் பண்டிகை: ஆளுநர் வாழ்த்து
By DIN | Published On : 11th September 2019 09:34 AM | Last Updated : 11th September 2019 09:34 AM | அ+அ அ- |

மொஹரம் பண்டிகையையொட்டி, புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் கிரண் பேடி வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மொஹரம் பண்டிகையின்போது, இஸ்லாமிய நாள்காட்டி தொடங்குகிறது.
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகையாக மொஹரம் விளங்குகிறது. மொஹரத்தில் இருந்து 10-ஆவது நாள் முகம்மது நபியின் பேரன் இமான் ஹூசைன் வீரமரணம் அடைந்த நாளாகும். அவரது வீரமரணம் என்பது மனச்சோர்வு, அநீதிக்கு எதிரான எதிர்ப்பின் சின்னமாகும்.
இந்த நாளில் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிரான அநீதிகளை களையவும், சமத்துவத்தை நிலைநாட்டவும் உறுதி ஏற்போம். அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் எனது மொஹரம் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.