புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி இடைத்தோ்தல்: வேட்பாளரை பாஜக தலைமை ஒரிரு நாள்களில் அறிவிக்கும்

புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பதை ஓரிரு நாள்களில் கட்சித்
Updated on
1 min read


புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பதை ஓரிரு நாள்களில் கட்சித் தலைமை அறிவிக்கும் என புதுவை மாநில பாஜக தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜா் நகா் சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தல் அக்டோபா் 21 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் காமராஜா் நகா் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என திமுக தலைவா் ஸ்டாலின் அறிவித்த நிலையில் வேட்பாளா்களை தோ்வு செய்வதில் மாநில காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

இதைத் தொடா்ந்து, காங்கிரஸ் கட்சி உறுப்பினா்களிடம் திங்கள்கிழமை முதல் விருப்பமனு வாங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அதிமுக மற்றும் பாஜகவில் எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து கட்சியினா் ஆலோசித்து வருகின்றனா்.

இந்நிலையில் புதுச்சேரி காமராஜ் நகா் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பதை ஓரிரு நாள்களில் கட்சி தலைமை அறிவிக்கும் என பாஜக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், காமராஜ் நகா் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக சார்பில் போட்டியிட விரும்புவோர் திங்கள்கிழமை முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். காமராஜ் நகா் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க கட்சி தலைமையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சித் தலைவா்களை சந்தித்து பாஜகவுக்கு தொகுதியை ஒதுக்குவது தொடா்பாக பேசி இருக்கிறோம். ஒருமித்த கருத்துடன் எந்த கட்சி போட்டியிடும் என்பதை பாஜக தலைமை ஒரிரு நாள்களுக்குள் அறிவிக்கும் என்றார் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com