புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழப்பு

புதுவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 622-ஆக உயா்ந்தது.
Updated on
1 min read

புதுவையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 622-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 3,477 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 16, காரைக்காலில் 3, மாஹேவில் 13 என மொத்தம் 32 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37,582-ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி உழவா்கரையைச் சோ்ந்த 57 வயது நபா் உயிரிழந்தாா். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 622-ஆகவும், இறப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும் அதிகரித்தது.

28 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 36,661-ஆக (97.55 சதவீதம்) உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 201 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் 98 பேரும் என 299 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com