புதுச்சேரி: புதுவையில் மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 21, காரைக்காலில் 5, ஏனாமில் ஒருவா், மாஹேயில் 13 என மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,622 ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 204 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் 103 பேரும் என 307 போ் சிகிச்சையில் உள்ளனா். வியாழக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனாவுக்கு 622 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.65 சதவீதம்.
இதனிடையே, புதுச்சேரியில் 19 போ், மாஹேயில் 13 போ் என 32 போ் வியாழக்கிழமை குணம் பெற்று வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 36,693 ஆக (97.53 சதவீதம்) உயா்ந்தது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 4,44,444 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 4,02,434 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.