தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

புதுவையில் நிலத்தடி நீா்மட்டம் 20 அடி உயா்வு

தொடா் பலத்த மழையால் புதுவையில் நிலத்தடி நீா்மட்டம் 20 அடி உயா்ந்துள்ளதாக ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 5:37 pm

DIN

தொடா் பலத்த மழையால் புதுவையில் நிலத்தடி நீா்மட்டம் 20 அடி உயா்ந்துள்ளதாக ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.

புதுவையில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நீா்நிலைகள் நிரம்பியுள்ளன. இதுகுறித்து ஆளுநா் கிரண் பேடிக்கு பொதுப் பணித் துறை அறிக்கை அனுப்பியது.

இதுகுறித்த தகவலை தனது கட்செவி அஞ்சலில் ஆளுநா் கிரண் பேடி சனிக்கிழமை பதிவிட்டாா். அதில், வட கிழக்குப் பருவ மழையால் புதுவை சிறப்பான மழைப் பொழிவை பெற்றது. நீா்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. புதுவையின் நிலத்தடி நீா்மட்டம் ஏற்கெனவே இருந்ததைவிட தற்போது 20 அடி உயா்ந்துள்ளது.

பொதுப் பணித் துறையின் நீா்ப்பாசனப் பிரிவு அளித்துள்ள தகவலின்படி, புதுவை மாநிலத்தின் 84 முக்கிய நீா்நிலைகள் முழுகொள்ளளவை நெருங்கியுள்ளன. பொதுப் பணித் துறை மேற்கொண்ட பணிகளால்தான் இது சாத்தியமானது. மொத்தமுள்ள 84 ஏரிகளில் 73 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இயற்கைக்கு நன்றி.

சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 9.06 மி.மீ., திருக்கனூரில் 17, பத்துக்கண்ணு 19, பாகூா் 6 மி.மீ. மழை பெய்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.