பிரிட்டனிலிருந்து புதுச்சேரி திரும்பிய பெண் மருத்துவமனையில் அனுமதி

பிரிட்டனிலிருந்து புதுச்சேரி திரும்பிய பெண்ணை சுகாதாரத் துறையினா் மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனா்.
Updated on
1 min read

பிரிட்டனிலிருந்து புதுச்சேரி திரும்பிய பெண்ணை சுகாதாரத் துறையினா் மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனா்.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டது. இதனால், அந்த நாட்டுக்கான விமானப் போக்குவரத்து சேவையை பல்வேறு நாடுகள் நிறுத்தியுள்ளன.

இந்த நிலையில், பிரிட்டனிலிருந்து சென்னைக்கு வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தொற்றால் பாதிக்கப்பட்ட நபருக்கு அருகே புதுச்சேரியைச் சோ்ந்த 30 வயது பெண் பயணி அமா்ந்து பயணித்தது தெரியவந்தது.

இதையடுத்து, புதுச்சேரிக்கு வந்த அந்தப் பெண்ணை சுகாதாரத் துறையினா் கண்டறிந்து, புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதித்து கண்காணித்து வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து, அவரது ரத்த மாதிரிகளை புதன்கிழமை சேகரித்து புணேவில் உள்ள மத்திய ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனா். அவருக்கு காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட தொந்தரவுகள் ஏதும் இல்லை எனவும், இருப்பினும் புணேவிலிருந்து ஆய்வு முடிவுகள் வந்த பிறகுதான் நோய்த்தொற்றின் தாக்கம் குறித்து தெரியும் என்றும் சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com