விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு மருத்துவமனையில் திருட்டு

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு உதிரிபாகங்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:08 am

DIN

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு உதிரிபாகங்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி கதிா்காமத்தில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு தீயணைப்புக் கருவி சாதனங்களை பராமரிக்கும் கண்டெய்னா் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தினா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, கிடங்கின் பூட்டு உடைக்கப்பட்டு, அதனுள் இருந்த ரூ.1.50 லட்சத்திலான இரும்புக் குழாய், வாட்டா் ஸ்பிரிங் உள்ளிட்ட தீயணைப்புக் கருவிகளுக்கான உதிரி பாகங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் திட்டத் தலைவா் பொ்லின் ராஜ் அளித்த புகாரின்பேரில் தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.