திருநள்ளாறு கோயிலுக்கு வருவோரிடம் மருத்துவ சான்றிதழ் இருக்க வேண்டும்: ஆளுநர் கிரண்பேடி 

புதுச்சேரி காரைக்கால் திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இரு காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
திருநள்ளாறு கோயிலுக்கு வருவோரிடம் மருத்துவ சான்றிதழ் இருக்க வேண்டும்: ஆளுநர் கிரண்பேடி 

புதுச்சேரி காரைக்கால் திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட இரு காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் கோயிலுக்கு வரும் அனைவரிடமும் கரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் இருக்க வேண்டுமென ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியில் சனி பகவான் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சனிக்கிழமை (டிச. 27) சனிப்பெயர்ச்சி விழா தொடங்கி பிப்ரவரி 12 ஆம் தேதி (48 நாள்கள்) வரை நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், காரைக்காலில் சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 2 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆளுநர் கிரண்பேடி சனிபகவான் கோயிலுக்கு கரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ சான்றிதழுடன் வரும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கட்செவி அஞ்சலில் வெளியிட்டுள்ள தகவல்: நேரடியாக சனிபகவான் கோயிலுக்கு செல்ல ஆர்வமுள்ள அனைவரிடமும் மருத்துவச் சான்றிதழ் இருக்க வேண்டும். கரோனா பரிசோதனையின் சமீபத்திய மருத்துவச் சான்றிதழை மக்கள் எடுத்து செல்வது முக்கியம். சனிபகவான் கோயில் ஒரு மருந்தகமோ, மருத்துவமனையோ அல்ல.

இது பக்தி மற்றும் வழிபாட்டுக்கான இடமாகும். எனவே, பொதுமக்கள் கரோனா பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டும் தயவு செய்து அங்கு செல்லுங்கள். இல்லையெனில் தயவு செய்து நீங்கள் நேரடி காணொலியில் பாருங்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com