உரிய அனுமதியின்றி பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது: புதுவை ஆளுநர் கிரண்பேடி அதிரடி

உரிய அனுமதியின்றி பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என புதுவை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
உரிய அனுமதியின்றி பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது: புதுவை ஆளுநர் கிரண்பேடி அதிரடி

உரிய அனுமதியின்றி பட்ஜெட் தாக்கல் செய்யக் கூடாது என புதுவை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுவை ஆளுநர் கிரண்பேடி இன்று முதல்வர் நாராயணசாமி க்கு அனுப்பியுள்ள கடிதத்தில், எந்த ஒரு பட்ஜெட்டாக இருந்தாலும் ஓர் ஆண்டுக்கான வரவு செலவு கணக்குகளை முழுமையாக தயாரித்த பின்னரே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். புதுவை பட்ஜெட்டில் ஓராண்டுகான மானிய செலவு தொகை உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லை. 

எனவே யூனியன் பிரதேச விதிகளின்படி உரிய அனுமதி பெற்ற பின்னரே பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். ஓராண்டு மானியத் தொகை உள்ளிட்ட விவரங்களை சரியாக கணக்கிட்டு புதிய கோப்பை ஆளுநரின் அனுமதிக்காக அனுப்ப வேண்டும். அதன்பின்னரே பேரவையில் தாக்கல் செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார் ஆளுநர் கிரண்பேடி. புதுவை பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் ஆளுநர் கிரண்பேடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதனிடையே புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்காமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் தலைமையில் தொடங்கியது. பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல்வழங்காத நிலையில் கூட்டத்தொடர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com