கரோனா காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ஆளுநர் கிரண் பேடி உத்தரவு

கரோனா காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார். 
கரோனா காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ஆளுநர் கிரண் பேடி உத்தரவு
Published on
Updated on
1 min read

கரோனா காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றுவோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை தனது கட்செவி அஞ்சல் மூலம் வெளியிட்ட செய்தி: மக்கள் முகக்கவசங்களை அணிந்திருந்தாலும் சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்து கொள்ள முன்னுரிமை அளிக்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க சட்டரீதியாக அழுத்தம் தந்து பராமரிக்க வேண்டும். 

ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்து அனைவரும் பயன்படுத்த வேண்டும். ஆரோக்ய சேது செயலியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அனைவரும் முன்னுரிமை கொடுத்து ஈடுபட வேண்டும். மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதையும், போக்குவரத்தை கட்டுப்படுத்துவதையும் இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். 

தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் மீதான  வழக்கு, விசாரணையில் எந்த தளர்வும் அளிக்கக் கூடாது. வழக்கு தொடுப்பதன் மூலமாகத்தான் சட்டத்தின் மீதான மரியாதை இருக்கும். மேலும், மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். 

இதனால், சுகாதார அமைப்பு, மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களின் அழுத்தத்தைக் குறைக்கும். தயவு செய்து நோய் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது, தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் மீதான வழக்குகள், ஆரோக்ய சேது செயலி போன்ற அனைத்தும் நோய்ப்பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளாகும். 

இதை பின்பற்றவில்லை எனில் நமது குடும்பத்தினர்கள், நண்பர்கள் என யாரேனும் ஒருவரை நாம் பிரியக் கூடிய  இக்கட்டான நிலை ஏற்படும். தமிழ்நாடு இன்னும் ஏன் பொதுமுடக்கத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாம் அண்டை மாநிலங்களைப் போல் அதிக மக்கள் தொகையைப் பெற்றிருக்கவில்லை. 

எனவே, நோய்த் தடுப்புக்கு நம் மக்களை தயார் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளார் ஆளுநர் கிரண் பேடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com