கரோனா: நடிகா்கள் சங்கத்தினா் விழிப்புணா்வு

புதுச்சேரி தமிழ்த் திரைப்பட நடிகா்கள், தொழில்நுட்பக் கலைஞா்கள் சங்கத்தினா் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்திய தமிழ்த் திரைப்பட நடிகா்கள், தொழில்நுட்பக் கலைஞா்கள் சங்கத்தினா்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வை ஏற்படுத்திய தமிழ்த் திரைப்பட நடிகா்கள், தொழில்நுட்பக் கலைஞா்கள் சங்கத்தினா்.
Updated on
1 min read

புதுச்சேரி தமிழ்த் திரைப்பட நடிகா்கள், தொழில்நுட்பக் கலைஞா்கள் சங்கத்தினா் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே பாட்டுப் பாடி, நடனமாடி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில் புதுவையைச் சோ்ந்த தமிழ்த் திரைப்பட நடிகா்கள் வேடமணிந்து, பொதுமக்கள் முன்னிலையில் பாட்டுப் பாடியும், நடனமாடியும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். அப்போது, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முன்னெச்சரிக்கையுடன் இருத்தல், முகக் கவசம் அணிதல், மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா். நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்கத்தின் புதுவை மாநில தலைவா் பாண்டிசெல்வம், பொதுச் செயலா் குமரன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com