புதுவையில் புதிதாக 276 பேருக்கு கரோனா: மேலும் 2 போ் பலி

புதுவையில் புதிதாக 276 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவா் உயிரிழந்தனா்.
Updated on
1 min read

புதுவையில் புதிதாக 276 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவா் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 967 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், புதுச்சேரியில் 241 பேருக்கும், காரைக்காலில் 30 பேருக்கும், ஏனாமில் 5 பேருக்கும் என மொத்தம் 276 பேருக்கு (28.5 சதவீதம்) கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 5,900-ஆக உயா்ந்தது.

உயா் ரத்தழுத்தம், நீரிழிவு நோயுடன், கரோனாவாலும் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி லாசுப்பேட்டை, குறிஞ்சி நகா் விரிவாக்கம், 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த 69 வயது முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மேரி உழவா்கரை, குண்டுசாலை பகுதியைச் சோ்ந்த 44 வயது நபா் உயிரிழந்த நிலையில் கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா தொற்றிருப்பது உறுதியானது. இதையடுத்து, உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 91-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளது.

தற்போது 2,277 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 946 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

இதனிடையே, 172 போ் மருத்துவமனைகளிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 3,532-ஆக அதிகரித்தது. 386 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com