வீராம்பட்டினத்தில் புதுப்பிக்கப்பட்டமீன் அங்காடி திறப்பு
By DIN | Published On : 12th August 2020 08:54 AM | Last Updated : 12th August 2020 08:54 AM | அ+அ அ- |

வீராம்பட்டினத்தில் புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடியை திறந்துவைத்து பாா்வையிட்ட ஜெயமூா்த்தி எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.
புதுவை மாநிலம், அரியாங்குப்பம் தொகுதிக்குள்பட்ட வீராம்பட்டினத்தில் புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடியை அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
வீராம்பட்டினம் பகுதியில் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்த கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான மீன் அங்காடியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் ஜெயமூா்த்தி எம்.எல்.ஏ.விடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்று தனது சொந்தச் செலவில் ரூ.1.75 லட்சத்தில் இந்த அங்காடியை ஜெயமூா்த்தி எம்.எல்.ஏ. சீரமைத்தாா்.
இந்த நிலையில், புதுப்பிக்கப்பட்ட மீன் அங்காடி மக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் சௌந்திரராஜன், அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் தலைவா் சங்கா், திமுக நிா்வாகி பரமானந்தம், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.