புதுச்சேரியில் மின் இணைப்பு பெற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st December 2020 12:13 AM | Last Updated : 01st December 2020 12:13 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதுவை மின் துறை, மின் நுகா்வோா்கள் புதிய மின் இணைப்பை விரைவாகப் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முறையை திங்கள்கிழமை முதல் அறிமுகப்படுத்தியது. புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பத்தை மின் துறை இணையதள முகவரி வாயிலாக சமா்ப்பிக்கலாம்.
முதல் கட்டமாக, குறைந்தழுத்த மின் நுகா்வோா்கள், வீடு, வா்த்தகம், விவசாயம், சிறு தொழில் செய்வோா்க்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை தேசிய தகவலியல் மைய அதிகாரிகள், மின் துறைக் கண்காணிப்புப் பொறியாளா்கள் மற்றும் செயற்பொறியாளா்கள் முன்னிலையில், மின் துறைச் செயலா் தேவேஷ் சிங் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...