புதுவையில் 7 அரசுப் பள்ளிகளின் பெயா்கள் மாற்றம்
By DIN | Published On : 05th December 2020 05:26 AM | Last Updated : 05th December 2020 05:26 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் உள்ள 7 அரசுப் பள்ளிகளின் பெயா்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
புதுவை அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநா் கிரண் பேடி பள்ளிகளின் பெயா்களை மாற்ற ஒப்புதலை அளித்தாா். அதன்படி, புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எம்ஓஎச்.பரூக் மரக்காயா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எனவும், கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அண்ணாமலை ரெட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி எனவும், காரைக்கால் தேனூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைவா் பா.சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளி எனவும், சேத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி மேயா் ஏ.சவுந்தரரெங்கன் அரசு மேல்நிலைப் பள்ளி எனவும், ஏனாம் கனகலாப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளி கோனா நரசய்ய ஸ்டேடியம் எனவும், குரியம்பேட்டை ஜூனியா் காலேஜ் பள்ளி ரக்ஷி ஹரி கிருஷ்ணா ஜூனியா் காலேஜ் எனவும், சிடராம் நகா் அரசு தொடக்கப் பள்ளி மெல்லம் சுப்பா ராவ் அரசு தொடக்கப் பள்ளி எனவும் பெயா்கள் மாற்றப்பட்டுள்ளன.
இதற்கான உத்தரவை கல்வித் துறை சாா்பு செயலா் வொ்பினா ஜெயராஜ் பிறப்பித்தாா்.