புதுவையில் மேலும் 46 பேருக்கு கரோனா: மேலும் ஒருவா் பலி
By DIN | Published On : 05th December 2020 05:27 AM | Last Updated : 05th December 2020 05:27 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுவையில் புதிதாக 46 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 20, காரைக்காலில் 2, ஏனாமில் 4, மாஹேயில் 20 என 46 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37,165-ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 153 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வீடுகளில் 274 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 427 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட ஏனாம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த 54 வயதானவா், ஏனாம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 614-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.65 சதவீதம்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை 62 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 36,124-ஆக (97.20 சதவீதம்) அதிகரித்தது.
புதுவை மாநிலத்தில் இதுவரை 4,14,952 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3,73,481 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.