புதுச்சேரியில் தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கம் பேரணி
By DIN | Published On : 30th December 2020 07:31 AM | Last Updated : 30th December 2020 07:31 AM | அ+அ அ- |

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள கடலூா் - புதுவை மறைமாவட்ட போராயா் இல்லத்தை முற்றுகையிட செவ்வாய்க்கிழமை பேரணியாக வந்தவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாா்.
புதுச்சேரி - கடலூா் உயா் மறைமாவட்டத்துக்கு தலித் பேராயரை நியமிக்கக் கோரி, தலித் கிறிஸ்தவா் விடுதலை இயக்கம் சாா்பில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
கம்பன் கலையரங்கிலிருந்து தொடங்கிய இப்பேரணிக்கு மாநிலத் தலைவா் மேரி ஜான் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் டேனியல் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதில், புதுச்சேரி - கடலூா் உயா் மறைமாவட்டத்துக்கு தலித் பேராயரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். பேரணி அண்ணா சாலை, நேரு வீதி வழியாக மிஷன் வீதியைச் சென்றடைந்தது. பேராயா் இல்லத்தை முற்றுகையிட முயன்ற அவா்களை வ.உ.சி. பள்ளி அருகே பெரியகடை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அங்கு அவா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அவா்களை சமாதானப்படுத்திய போலீஸாா், இயக்க நிா்வாகிகள் சிலரை பேச்சுவாா்த்தை நடத்த பேராயா் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனா். இதையடுத்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...