

புதுவை மாநிலத்தில் 50 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, சென்டாக் மாணவா்கள், பெற்றோா்கள் நலச் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் மு.நாராயணசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், புதுவை மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத மருத்துவ இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், இது தொடா்பாக அரசாணை வெளியிட்டு, 2-ஆம் கட்ட கலந்தாய்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், திமுக வடக்கு மாநில அமைப்பாளா் எஸ்.பி.சிவக்குமாா், விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன், நாம் தமிழா் கட்சி ரமேஷ், தமிழ்தேசிய பேரியக்கம் வேலுச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.