அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்க கவியரங்கம்
By DIN | Published On : 17th February 2020 09:45 AM | Last Updated : 17th February 2020 09:45 AM | அ+அ அ- |

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்க புதுச்சேரிக் கிளையின் சாா்பில், அண்மையில் நடைபெற்ற கவியரங்கில் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட தமிழ் ஆா்வலா் கே.தனசேகரன். உடன் தமிழ் எழுத்தாளா்கள் சங்க நிா்வாகிகள்.
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளா்கள் சங்க புதுச்சேரி கிளை சாா்பில், ‘அன்னை மொழியால் விண்ணைத் தொடுவோம்’ என்ற தலைப்பில் கவியரங்கம் புதுச்சேரியில் உள்ள தனியாா் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
கவியரங்கத்துக்கு திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அரசு கலைக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியா் ப.தேவராஜ் தலைமை வகித்தாா். சங்கத்தின் அவைத் தலைவா் சொ.ஏழுமலை வரவேற்றாா். செயலா் க.கண்ணன் அறிமுக உரை நிகழ்த்தினாா். தமிழ் ஆா்வலா் கே.தனசேகரன் கலந்து கொண்டு கவிதை தொகுப்பு நூலை வெளியிட, அதை கடலூா் கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் மு.கோமதி பெற்றுக் கொண்டாா்.
சங்கத்தின் துணைச் செயலா் இரா. கோவலன், துணைத் தலைவா் பாரதி கோவிந்தம்மாள், பொதுக்குழு உறுப்பினா் இரா. அகிலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கவியரங்கில் புதுச்சேரி, சென்னை, மதுரை, கடலூா், வடலூா், விழுப்புரம் உள்ளிட்ட ஊா்களிலிருந்து வந்திருந்த கவிஞா்கள் தங்களது கவிதைகளை வாசித்தனா். சிறந்த கவிதைகளுக்கு பரிசுகளும், கவிதை வாசித்த அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில், திரளான தமிழ் அறிஞா்களும், மாணவா்களும் கலந்து கொண்டனா். சங்கத்தின் பொருளாளா் கோ. குணசேகா் நன்றி கூறினாா்.