புதுச்சேரி அருகே நடந்து சென்றவா் மீது பைக் மோதியதில் கடலூா் இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (22). இவா், செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் சொந்த வேலையாக கடலூரிலிருந்து புதுச்சேரி அருகே உள்ள கன்னியகோவில் பகுதிக்கு வந்துகொண்டிருந்தாா். பரிக்கல்பட்டு - முள்ளோடை சாலையில் இவரது வாகனம் வந்தபோது, அங்கு நடந்து சென்ற கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த கிருபாநிதி (32) மீது மோதியது. இதில், கிருபாநிதியும், பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த மணிகண்டனும் பலத்த காயமடைந்தனா்.
அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மணிகண்டன் உயிரிழந்தாா். கிருபாநிதி தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.