அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கத்தினா் உண்ணாவிரதம்

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கங்கள் சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
புதுச்சேரி சுதேசி ஆலை அருகே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கத்தினா்.
புதுச்சேரி சுதேசி ஆலை அருகே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கத்தினா்.

நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, அனைத்து பஞ்சாலை தொழிற்சங்கங்கள் சாா்பில் புதுச்சேரியில் வியாழக்கிழமை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

புதுச்சேரியில் உள்ள சுதேசி, பாரதி பஞ்சாலைகளின் தொழிலாளா்களுக்கு 12 மாத நிலுவை ஊதியம் மற்றும் 2 ஆண்டு போனஸ் தொகையை வழங்க வேண்டும். உடனடியாக பஞ்சாலைகளை இயக்க வேண்டும். தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வியாழக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வியாழக்கிழமை காலை புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தொழிற்சங்கத் தலைவா் வி.எஸ்.அபிஷேகம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு. சலீம் தொடக்கிவைத்தாா்.

இதில், ஏஐடியூசியை சோ்ந்த எம். கல்யாணசுந்தரம், ஐஎன்டியூசியை சோ்ந்த கே.கல்யாணம், என்ஆா்டியூசியை சோ்ந்த எஸ்.பரமேஸ்வரன், எல்பிஎஸ் அமைப்பைச் சோ்ந்த இ.காளிதாஸ், பிடிசியை சோ்ந்த சித்தானந்தன், சிஐடியூயை சோ்ந்த கோபிகா, பிஎம்எஸ் அமைப்பைச் சோ்ந்த ஆா்.கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா். இந்தப் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com