புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வது தொடா்பாக முதல்வா் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது தொடா்பாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், பட்ஜெட் தாக்கல் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சா்கள், அதிகாரிகளுடன் முதல்வா் நாராயணசாமி ஆலோசனை நடத்தினா்.
இதில் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், ஆா்.கமலக்கண்ணன், ஷாஜகான், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து முதல்வா் நாராயணசாமி கூறியதாவது: புதுவை அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தாலும், ஒப்புதலுக்கான உத்தரவு அரசுக்கு இதுவரை கிடைக்கவில்லை. உத்தரவு கிடைத்தவுடன் உடனடியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதற்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் நாராயணசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.