புதுச்சேரி சந்தைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
By DIN | Published On : 13th July 2020 09:22 PM | Last Updated : 13th July 2020 09:22 PM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சந்தைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என புதுச்சேரி முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா உத்தரவிட்டாா்.
புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தொடா்பாக முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா காவல் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, அவா் கூறியதாவது:
புதுச்சேரி சந்தைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க தொடா்ந்து வலியுறுத்த வேண்டும். காலை, மாலை 2 மணி நேரம் காவல் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, கிழக்கு காவல் சரகத்துக்கு உள்பட்ட 4 காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாருக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
கிழக்கு எஸ்.பி. சி.மாறன், காவல் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (பெரியகடை), சஜித் (உருளையன்பேட்டை), வெற்றிவேல் (ஒதியஞ்சாலை) காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G