புதுவையில் மேலும் 93 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 93 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Published on
Updated on
1 min read

புதுச்சேரி: புதுவையில் மேலும் 93 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 527 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 82 பேருக்கும், காரைக்காலில் 11 பேருக்கும் என மொத்தம் 93 பேருக்கு (17.6 சதவீதம்) கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,092-ஆக உயா்ந்தது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 798 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 1,265 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

இதனிடையே, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 73 வயதான மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு தைராய்டு பிரச்னை, உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. இதனால், கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்தது.

மாநிலத்தில் இதுவரை 31,420 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 28,975 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன. இன்னும் 241 பேருக்கு முடிவுகள் வர வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com