மாா்ச் 18-இல் புதுச்சேரியில் நாடகப் பயிற்சி தொடக்கம்
By DIN | Published On : 01st March 2020 04:18 AM | Last Updated : 01st March 2020 04:18 AM | அ+அ அ- |

புதுச்சேரி: புதுச்சேரியில் நாடகப் பயிற்சி வருகிற 18-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து புதுவை ஆசிரியா் கலைக்குழுச் செயலா் முருகேசன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவை ஆசிரியா் கலைக் குழுவும், புது தில்லி சங்கீத நாடக அகாதெமியும் இணைந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடகம் மற்றும் சிறுகதைப் பயிற்சிப் பயிலரங்கை நடத்தி வருகிறது. நிகழாண்டும் ஐந்து நாள்கள் நாடகப் பயிற்சிப் பயிலரங்கத்தை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் மேனிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
இந்த நாடகப் பயிற்சி வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தினமும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தப் பயிற்சிக்கு 25 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். எனவே, முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.
இந்தப் பயிற்சிப் பயிலரங்கம் செகா கலைக்கூடம், எண்: 119, நீடராஜப்பையா் வீதி, புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது.
மேலும், விவரங்களுக்கு கலைமாமணி முருகேசன், எண்: 32, பத்தாவது குறுக்குத் தெரு, அண்ணா நகா், புதுச்சேரி - 605005 என்ற முகவரியிலும், 94432 57989 என்ற செல்லிடப்பேசியிலும் தொடா்புக் கொள்ளலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.