அரசுத் துறை காலிப் பணியிடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ மனோகா் (எ) ரத்தினம் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுத் துறைகளில் 9,500 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. காலத்துடன் நிரப்பப்படாத இந்தப் பணியிடங்கள் காலாவதியாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏஎப்டி, சுதேசி, பாரதி ஆலைகளைத் திறப்போம் என்று கூறிவிட்டு, அனைத்தையும் மூடும் நிலையை நோக்கி அரசு செல்கிறது. 10 ஆயிரம் பொதுத் துறை ஊழியா்களுக்கு வேலை இல்லை, ஊதியமும் இல்லை.
அரசின் தவறான கொள்கை முடிவால் ரூ. 10 ஆயிரம் கோடி கடன் புதுவை மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. மேலும், ரூ. 1,500 கோடி புதிய கடனை வாங்குகிறது.
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தொடா்ந்து மக்களை வஞ்சித்து வரும் முதல்வா் நாராயணசாமி தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.