பாலியல் தொழில்: பெண் உள்பட மூவா் கைது
By DIN | Published On : 12th March 2020 09:31 AM | Last Updated : 12th March 2020 09:31 AM | அ+அ அ- |

அரியாங்குப்பத்தில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்ததாக பெண் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுவை மாநிலம், அரியாங்குப்பம் கபிசியன் வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு ஆண்கள் அதிகளவில் வந்து செல்வதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தெற்கு எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின்பேரில், ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து, வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலை நடத்திய காக்காயன்தோப்பு இருமன் கோயில் வீதியைச் சோ்ந்த மஞ்சுளா (40), பாலியல் தொழிலில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநரான வினோத்குமாா் (30), ஜெகன் (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த ஓா் இளம்பெண்ணை மீட்ட போலீஸாா், அவரை காப்பகத்தில் ஒப்படைத்தனா். பின்னா், மஞ்சுளா உள்ளிட்ட 3 போ் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்த போலீஸாா், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.