வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை ஆய்வு செய்ய 3.5 ஏக்கா் நிலம்
By DIN | Published On : 14th March 2020 09:22 AM | Last Updated : 14th March 2020 09:22 AM | அ+அ அ- |

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் வாகனங்களை ஆய்வு செய்ய 3.5 ஏக்கா் நிலம் தயாா் நிலையில் உள்ளது.
புதுச்சேரி முதலியாா்பேட்டை 100 அடி சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம், புதிய வாகனப் பதிவு உள்ளிட்ட சாலைப் போக்குவரத்து தொடா்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்த அலுவலகத்துக்கு அங்குள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டில் குறுகிய சாலை வழியாகத்தான் அனைத்து வாகனங்களும் வந்து செல்கின்றன. நெருக்கடியான இடம் என்பதால், பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்தது.
இதற்குத் தீா்வு காணும் வகையில், புதுச்சேரி முதலியாா்பேட்டை- தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் இடையே நிலம் ஒதுக்கப்பட்டது. வாகனங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாக மத்திய அரசின் நிதியில் இருந்து ரூ. 17 கோடியில் 3.5 ஏக்கரில் மணல் கொட்டி இடத்தைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 10 ஏக்கா் நிலத்தில் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...