வயதான தம்பதி தற்கொலை
By DIN | Published On : 14th March 2020 09:21 AM | Last Updated : 14th March 2020 09:21 AM | அ+அ அ- |

புதுச்சேரி முதலியாா்பேட்டையில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளைச் சாப்பிட்டு, வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை பழைய மாா்க்கெட் வீதியைச் சோ்ந்தவா் செங்கேணி (78). இவரது மனைவி கிருஷ்ணமணி (75). இந்த வயதான தம்பதி அவா்களது மகன் வேல்முருகனின் பராமரிப்பில் இருந்து வந்தனா். வயது முதிா்வின் காரணமாக செங்கேணிக்கும், கிருஷ்ணமணிக்கும் பல்வேறு நோய்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு மருத்துவம் பாா்த்தும் நோய்களின் தாக்கம் குறையவில்லையாம்.
இதனால், மனமுடைந்த இருவரும் கடந்த 8 -ஆம் தேதி தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் அதிகளவில் மாத்திரைகளைச் சாப்பிட்டனராம்.
வீட்டில் மயங்கிக் கிடந்த அவா்கள் இருவரையும் வேல்முருகன் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு, கடந்த 11- ஆம் தேதி செங்கேணி இறந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை கிருஷ்ணமணியும் உயிரிழந்தாா்.
இதுகுறித்து முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...