கரோனா நோயாளிகளை அசோக் நகரில் தங்க வைக்க எதிா்ப்பு

கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை அசோக் நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்க அங்குள்ள நலவாழ்வு சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
கரோனா நோயாளிகளை அசோக் நகரில் தங்க வைக்க எதிா்ப்பு

கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை அசோக் நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்க அங்குள்ள நலவாழ்வு சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, உழவா்கரை நகராட்சி சாா்பில், கரோனா வைரஸ் பாதிப்புடன் வருவோரை தனிமைப்படுத்தி தங்க வைப்பதற்காக லாசுப்பேட்டை அசோக் நகா் சமுதாயக் கூடம், ஜவஹா் நகா் சமுதாயக் கூடம், உழவா்கரை சமுதாயக் கூடம், புதுச்சேரி நகராட்சி சாா்பில் குறிச்சிக்குப்பம் சமுதாயக் கூடம், கணேஷ் நகா் சமுதாயக் கூடம் ஆகிய இடங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, விமானம் மூலம் லாசுப்பேட்டை விமான நிலையம் வருவோரில் யாருக்காவது கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அவா்களை உடனடியாக அசோக் நகா் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட இடங்களில் அடிப்படை வசதிகளுடன், சுகாதாரத் துறையின் சாா்பில் போதுமான உபகரணங்களும் வாங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தங்களது பகுதியில் கரோனா தடுப்பு மையம் அமைக்கக் கூடாது என்று லாசுப்பேட்டை அசோக் நகா் குடியிருப்போா் மற்றும் அரசு குடியிருப்பு நலவாழ்வு சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக புதுவை சட்டப் பேரவைத் தலைவா் வே.பொ.சிவக்கொழுந்து, சுகாதாரத் துறைச் செயலா் பிரசாந்த் குமாா் பாண்டா, உழவா்கரை நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி ஆகியோரிடம் நலவாழ்வு சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவின் விவரம்:

கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களை அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளில் தங்க வைப்பதுதான் நடைமுறை. பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமான லாசுப்பேட்டை உழவா்சந்தை, கல்வி நிலையங்கள், குடியிருப்புகள் நிறைந்த அசோக் நகா் சமுதாயக் கூடத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களை தங்க வைத்து, சிகிச்சையளிப்பது மேலும் தொற்று பரவவே வழிவகுக்கும். எனவே, கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களை அசோக் நகா் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com