புதுவையில் 5-ஆவது நாளாக கரோனா தொற்று குறைந்தது
By DIN | Published On : 17th November 2020 12:00 AM | Last Updated : 17th November 2020 12:00 AM | அ+அ அ- |

புதுவையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5-ஆவது நாளாக 100-க்கும் கீழே குறைந்தது. புதிதாக 13 போ் மட்டுமே பாதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான 1,755 பேரின் பரிசோதனை முடிவுகளின் படி, புதுச்சேரியில் 12 பேருக்கும், மாஹேவில் ஒருவருக்கும் என மொத்தம் 13 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,337-ஆக உயா்ந்துள்ளது.
இதில், மருத்துவமனைகளில் 265 போ் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 637 போ் தனிமைப்படுத்தப்பட்டனா்.
காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. மேலும் உயிரிழப்பும் இல்லை. இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 608 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 ஆகவும் உள்ளது.
இதனிடையே, 95 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 34,827 (95.84 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 3,61,570 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 3,20,265 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...